ராட்சசன் பட இன்பராஜைவிட PSBB ஆசிரியர் மோசமானவன்! பிரபல இயக்குனர் ஆவேசம்
கடந்த சில நாட்களாக வைரலாக பேசிக்கொண்டிருக்கும் செய்து PSBB ஆசிரியர் ராஜகோபாலன் என்ற ஆசிரியரின் கேவளமான செயல்தான். சென்னை கேகே நகரில் இருக்கும் பத்ம சேஷாத்ரி பால பவன் என்ற பள்ளியில் முதுநிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியல் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியும் தொடர்பு கொண்டும் இருந்துள்ளார்.
மாணவிகளிடம் அத்துமீறிய வார்த்தையில் கேள்விகளை கேட்டு அசிங்கமாக நடந்து கொண்டுள்ளார். இதைவிட ஆன்லை வகுப்பில் வெறும் துண்டுடன் பாடம் நடத்திய கொடுரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுபற்றி கடந்த 25 மே புகாராக வெளொயாகி பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இது தற்போது சமுகவலைத்தளத்திலும் செய்தி தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுபற்றி ராஜகோபாலன் மீது வழக்க பதிவு செய்து 5 நாட்கள் காவல் விசாரணையில் இருக்க நீதிமன்றம் உத்திரவிட்டது. இந்த சம்பவம் குறித்து பல பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இச்சம்பவத்தை சில ஆண்டுகளுக்கு முன் மாணவிகள் துன்புறுத்தப்படும் சைகோ படமாக வெளியான ராட்சசன் படத்தை ஒப்பிட்டு பேசியும் வருகிறார்கள்.
அந்தவகையில் ஒரு நெட்டிசன் அவரது டிவிட்டர் பதிவில், ராட்சசன் படம் தவறான படம் என்று வாதம் செய்தேன், மிகக்கடுமையான தண்டனை என்பது தேவை என்று குறிப்பிட்டும் இருந்தார்.
இதற்கு ராட்சசன் படத்தின் இயக்குநர் ராம் குமார், ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யப்படவில்லை. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யபடவில்லை. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்!#PSBB https://t.co/cOSvUGWV9Y
— Ramkumar_official (@dir_ramkumar) May 24, 2021