முழு வன்ம குடோனாகிய குக் வித் கோமாளி.. மணிமேகலை கலாய்த்த புகழ், ராமர்..
குக் வித் கோமாளி 5
குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் இருந்து சுயமரியாதை காரணம் காட்டி மணிமேகலை விலகியது தற்போது பெரியளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. இதற்கு பிரியங்காவின் தலையீடு தான் காரணம் என்று மணிமேகலை மறைமுகமாகி விளாசினார்.
இதற்கு விஜய் டிவி பிரபலங்கள் பலர் பிரியங்காவிற்கு ஆதரவு அளித்திருந்தாலும் ரசிகர்கள் பெரும்பாலானோர் மணிமேகலைக்கு தான் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த வார இறுதி சுற்றுக்காண எபிசோட்டின் பிரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஆதில் ரக்ஷனுடன் தொகுப்பாளராக புகழ் நிற்கிறார்.
புகழ், ராமர்
அப்போது நீங்க போன வாரம் பார்த்து இருப்பீங்க ரெண்டு பேரை தூக்கி இருக்கோம் என்று புகழ் கூற உடனே ராமர், என்னது ரெண்டு பேரை தூக்கி இருக்கீங்களா? அப்படி சொல்லக்கூடாது ரெண்டு பேரை செலக்ட் பண்ணி இருக்கோம் என்று சொல்லணும் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு புகழ், நீங்க ஏன் தொகுப்பாளர் வேளையில் தலையிடுகிறீக? நீங்க இப்படி எல்லாம் பேசக்கூடாது? உங்களுக்கு பிடிக்கலன்னா வெளியே போங்க என்று கலாய்த்திருக்கிறார்.
இதை அப்படியே மணிமேகலையை பிரதிபலிப்பது போல் புகழ் பேசி கலாய்த்திருக்கிறார். இதனை பலர் திட்டியபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.