ஓவர் பந்தா.. அஸ்வின் போல் மாறப்போகும் புகழ்.. இதெல்லாம் நமக்கு தேவையா

Pugazh
1 மாதம் முன்
Kathick

Kathick

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து, துவங்கப்பட்ட இரண்டாவது சீசன் மூலம் புகழுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் மலைபோல் குவிந்தது. இதில் சமீபத்தில் வெளிவந்த வலிமை மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் படத்தில் புகழ் நடித்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மேடையில் நடிகர் அஸ்வின் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதன்முலம் நடிகர் அஸ்வின் பல இன்னல்களை சந்தித்து வந்தார். இந்நிலையில், அதே நிலைமைக்கு தற்போது புகழும் தள்ளப்படுவார் என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, படநிகழ்வுகளுக்கு செல்லும் பொழுது பாடிகாட்ஸ் இல்லாமல் செல்ல முடியாது என்று கூறுகிறாராம் புகழ். அதே போல் பல சினிமா நிகழ்ச்சிகளில் புகழ் பந்தா காட்டி வருகிறாராம். இதனால், விரைவில் அஸ்வின் போல் புகழும் அந்த நிலைமைக்கு தள்ளப்படுவார் என்று கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடப்போகிறது என்று.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.