பாக்யாஜ் செய்த துரோகம்..அடிக்க கல்லை தூக்கிட்டேன்!! இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் ஓபன் டாக்..
ஆர் சுந்தர்ராஜன்
தமிழ் சினிமாவில் பல கலைஞர்களின் வெள்ளி விழா நாயகர்கலை கண்டுள்ளது; அப்படி சமீபத்தில் வெள்ளி விழா கொண்டாடினார் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன். இயக்குநராக பயணித்தும் நடிகராக நடித்தும் வந்த சுந்தர்ராஜன், பயணங்கள் முடிவதில்லை என்ற வெற்றிப்படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கி அடுத்தடுத்த படங்களில் பணியாற்றினார். சமீபத்தில் சித்ரா லட்சுமணன் எடுத்த பேட்டியொன்றில் ஆர் சுந்தர்ராஜன் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், நானும் பாக்யராஜும் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்தவர்கள். நாங்கள் இருவரும் மிகவும் உயிருக்கு உயிரான நண்பர்களாக வளர்ந்தோம். கோவையில் நாங்கள் இருவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். கோவையில் பாக்யராஜை யாராவது திரும்பிப் பார்த்தாலே நான் அடிப்பேன், அந்தளவுக்கு நெருக்கமான நண்பன். சினிமா வாய்ப்புக்காக சென்னைக்கு இருவரும் வஃந்தோம், நான் நேரடியாகவே சென்னை வந்துவிட்டேன். பாக்யராஜ் பெங்களூருக்கு எல்லாம் சென்று வாய்ப்பு தேடிவிட்டு சென்னை வந்தார். எங்கள் இருவரில் பாக்யராஜ் தான் கேமரா ஆங்கிள் குறித்தெல்லாம் பேசுவார்.
நான் நினைத்துக்கொண்டது என்னவென்றால், நாங்கள் இருவரும் இணைந்தே படத்தை இயக்குவோம் என்பதுதான். ஆனால் அது நடக்கவில்லை. அவர் மனதில் என்ன யோசித்தார் என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் தங்கிருந்த அறைக்கு தூயவன் வருவார், அவர் பாரதிராஜா என்ற இயக்குநர் வந்துள்ளார், அவருக்கு உதவி இயக்குநர்கள் தேவை என்று கூற, நானோ பாக்யராஜ் போகட்டும், பாக்யராஜ் இயக்குநராகிவிட்டால் நானும் இயக்குநர் ஆகிவிடலாம் என்று யோசுத்தேன். அதேபோல் பாக்யராஜ் சென்றார்.
பாக்யாஜ் செய்த துரோகம்
புதி வார்ப்புகள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது, நடிப்பில் ஆர்வமே இல்லாத பாக்யராஜ் அன்று இரவே சொல்லாமல் கொள்ளாமல் அறையிலிருந்து புறப்பட்டுவிட்டார். பின் அவர் கதாநயாகனாகிவிட்டார், நான் வழக்கம் போல் பசியோடு வாய்ப்புக்காக சென்னையை வலம் வந்து கொண்டிருந்தேன்.
பாக்யராஜிடம் இருந்து ஒரு கடிதம் அப்போது வந்தது. நீ ஊருக்கு போய், உன் சகோதரிகளின் திருமணத்தை முடித்து வை, நான் இயக்குநரானதும் சொல்லி அனுப்புகிறேன், அப்போது வந்து என்னுடன் இணைந்துக்கொள் என்று இருந்தது. நான் அந்த கடித்தத்திற்கு நன்றி என்று பதிலெழுதி அதே கடித்தத்தை அனுப்பிவிட்டேன்.
பாக்யராஜின் மெளன கீதங்கள் படம் பார்க்கப்போனேன். அப்படத்தை பார்த்து நான் வியந்துவிட்டேன். நண்பன் வென்றுவிட்டான் என்ற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது தியேட்டரின் மேல் இருந்த பாக்யராஜ் எங்கள் இருவருக்கும் பழக்கமான பழனிசாமி மூலம் கூப்பிட்டுவிட்டார். நான் போடா என்று சொல்லிவிட்டு நடந்து வெளியே வந்துவிட்டேன்.
மவுண்ட் ரோடில் நடந்துக்கொண்டு இருக்கும் போது பென்ஸ் காரில் வந்த பாக்யராஜ், என்னை மீண்டும் பழனிசாமியை வைத்து அழைக்கிறார். நான் வரமாட்டேன் என்றேன். ஒரு கட்டத்தில் அடிக்க கல்லை தூக்கிவிட்டேன். உடனே பாக்யராஜ் அங்கிருந்து பழனிசாமியை நோக்கி, நீ வாடா அவன் சொன்னால் கேட்க மாட்டான் என்று கூறினார். எனக்குள் இருப்பது ஒன்றுதான், பாக்யராஜ் அழைத்திருந்தால் சென்றிருப்பேன், ஆனால் அந்த பழனிசாமியை விட்டு அழைத்து நான் போகுமளவிற்கு எங்கள் இருவருக்குமான பழக்கம் இல்லை என்று ஆர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.