விரைவில் விவாகரத்து!! நடிகரால் நடிகை ரச்சிதா எடுக்கப்போகும் திடீர் முடிவு

Serials Dinesh Karthik Rachitha Mahalakshmi Tamil TV Serials
By Edward Jun 21, 2023 09:09 AM GMT
Report

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

இந்த சீரியலை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த ரச்சிதா, நடிகர் தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நன்றாக வாழ்ந்து வந்த ரச்சிதா, சில கருத்து வேறுபாட்டால் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இதற்கு தினேஷும் பேட்டிகளில் இருவரும் மனம்விட்டு பேசினால் பிரச்சனை தீரும் என்று கூறியிருந்தார். இதன்பின் ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கணவரை பற்றி வாய்த்திறக்காமலும் இருந்தார்.

நிகழ்ச்சிக்கு பின்பும் பிக்பாஸ் நண்பர்களுடன் ஊர் சுற்றி வரும் ரச்சிதா, சென்னை மாங்காடு மகளிர் காவல் நிலையத்தில் தினேஷ் கார்த்திக் மீது புகார் ஒன்றினை அளித்துள்ளார்.

சில நாட்களாக தினேஷ் தனக்கு ஆபாசமாக செல்போனில் மெசேஜ் செய்து வருவதாகவும் அடிக்கடி தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறி புகாரளித்திருந்தார்.

காவல்நிலையத்தில் ஆஜரான தினேஷ், விவாகரத்து பெற நீதிமன்றத்திற்கு போகலாம் என்று கூறிவிட்டு சென்றுள்ளாராம். இதுகுறித்து கண்ணாடி துகல்கள் உடைந்த படி இருக்கும் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியையும் பதிவிட்டுள்ளார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

GalleryGallery