'என்னிடம் தவறாக நடந்து கொண்டார்'..கணவரால் இரவோடு இரவாக காவல்நிலையம் ஓடி வந்த ரச்சிதா!
Serials
Indian Actress
Rachitha Mahalakshmi
By Dhiviyarajan
வெள்ளித்திரையில் இருக்கும் நடிகைகளுக்கு நிகராக அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
இவர் ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சில வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே சில கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் தற்போது இருவரும் தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி மகளிர் காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர் மீது புகார் அளித்துள்ளார்.
அதில் "தினேஷ் சில தினங்களாக எனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார். மேலும் என்னை தொடர்பு கொண்டு மிரட்டுகிறார்" என்று ரச்சிதா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.