இயக்குனருக்கு அடுத்த வலை?விவாகரத்தாகமலே இரண்டாம் கல்யாணத்துக்கு ரெடியான சீரியல் நடிகை ரக்ஷிதா
பிரபல தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்ட நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. இதையடுத்து சரவணன் மீனாட்சி, நாச்சியார் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து பிரபலமானார்.
பின் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் மகா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். நடிகர் தினேஷ் கோபாலசாமியை 2015ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சீரியலிலும் நடித்து வந்த ரக்ஷிதா சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலக்கப்பட்டார்.
ஒருசில படங்களில் நடித்து வரும் ரக்ஷிதா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனிமையில் வாழ்ந்து வருகிறார். தற்போது விவாகரத்து ஆகாமலே வேறொருவரை கல்யாணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரபல சீரியல் இயக்குனர் ஒருவரை விரைவில் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளாராம். ஆனால், அவரை பற்றி விவரம் எதுவும் வெளியாகவில்லை. இதுவும் காதல் திருமணம் என்றும் கூறுகின்றனர்.