திரிஷாவை துரத்தி துரத்தி காதலித்த நடிகரை என்ன பண்ணேன் தெரியுமா!! பிரபல இயக்குனர் ஓப்பன் டாக்..

Prakash Raj Trisha Gossip Today Radha Mohan Ghilli
By Edward Jul 21, 2024 08:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன், லியோ போன்ற படங்களை தொடர்ந்து விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வரம்பரா, சல்மான் கானின் பாலிவுட் படம் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

திரிஷாவை துரத்தி துரத்தி காதலித்த நடிகரை என்ன பண்ணேன் தெரியுமா!! பிரபல இயக்குனர் ஓப்பன் டாக்.. | Radha Mohan About Trisha Prakash Raj Relationship

திரிஷா பற்றி சமீபகாலமாக பல செய்திகள் இணையத்தில் கசிந்து வரும் நிலையில், இயக்குனர் ராதா மோகன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் திரிஷாவை துரத்தி துரத்தி காதலித்த நடிகரை என்ன செய்தேன் என்று கூறியிருக்கிறார்.

மொழி, பயணம், காற்றின் கொழி, பொம்மை உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ராதா மோகன் தற்போது யோகி பாபுவை வைத்து சட்னி சாம்பார் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.


கில்லி படத்தில் திரிஷாவை செல்லம் ஐ லவ் யூ என சொல்லி துரத்தி துரத்தி காதலித்தவரை அடுத்ததாக என் படத்தில் திரிஷாவுக்கு அப்பாவாக நடிக்க வைத்தேன். ஆனால் அப்போது யாரும் அதை தப்பாக பார்க்கவில்லை. அபியும் நானும் படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.