ராஜலட்சுமி போட்டோ போட்டா வியாபாரம் ஆகுமா!! சர்ச்சையாக பேசிய பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் 41 ஆண்டுகளாக நடிகராகவும் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் ராதா ரவி. சமீபத்தில் இயக்குனர் கனபதி வேல்முருகன் இயக்கத்தில் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி நடிப்பில் லைசென்ஸ் என்ற படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் ராஜலட்சுமி பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாரதி கதாபாத்திரத்தின் தந்தையாக நடிகர் ராதா ரவி நடித்து வருகிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்தித்திப்பில் நடிகர் ராதாரவி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், இந்த படத்தின் இயக்குனருக்கு எப்படியொரு தைரியம். ராஜலட்சுமி போட்டோ போட்டால் வியாபாரம் ஆகிடுமாமா? ரஜினி சார் மூஞ்சியை போட்டாலே மூடிக்கிது. அப்படியிருக்கும் நிலையில் ராஜலட்சுமி முகத்தை போட்டு இருக்காரு இயக்குனர்.
இந்த கதைக்கு ஏற்ற கதாநாயகி ராஜலட்சுமி. மேலும், ராஜலட்சுமி நிகழ்ச்சிக்கு கணவர் செந்திலை கூட்டிக்கிட்டு வந்திருக்கு, ஏன்மா அவரை கூட்டிட்டு வந்த இனிமே கூட்டிட்டு வராத தொல்லை. நீதான் உனக்கு பாதுகாப்பு என்று அறிவுரை கூறி பேசியுள்ளார்.