என் அந்தரங்க வீடியோவை காவலர், டிரைவர் பார்த்துட்டாங்க..3 நாள் வெளியே வரல!! ராதிகா ஆப்தே ...

Radhika Apte Gossip Today Bollywood Indian Actress Actress
By Jai Sep 24, 2026 01:45 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் பலவிதமான போல்ட்டான படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருபவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் 3 ஆந்தாலஜியில் நடித்துள்ளார். லஸ்ட் ஸ்டோரிஸ் 3 வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வரும் நிலையில், தான் நடித்த படுக்கையறை காட்சி மற்றும் முத்தக்காட்சிகள் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார் ராதிகா.

என் அந்தரங்க வீடியோவை காவலர், டிரைவர் பார்த்துட்டாங்க..3 நாள் வெளியே வரல!! ராதிகா ஆப்தே ... | Radhika Apte About A Deeply Distressing Experience

என் அந்தரங்க வீடியோ

அதில், நெருக்கமான காட்சிகளை படமாக்குவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஒருமுறை, நான் நடித்த படத்தில் இருந்து நெருக்கமான காட்சி ஒன்று லீக்கானது. அதனால் நான் 4 நாட்கள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இணையத்தில் அந்த வீடியோ வேகமாக பரவ, அது உங்கள் வீடு வரை வரலாம். அதனால் மன வருத்தம் அடைந்த ஒருவர் உங்கள் வீட்டுக்கு வெளியே வந்து நிற்கக்கூடும். ஆகவே அப்படியான காட்சிகளில் நடிப்பது எளிதானதல்ல, மிகவும் சிக்கலானது. எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது.

அந்நேரத்தில் என் ஒப்பனை கலைஞர், என்னிடம், அவருடைய டிரைவர் இந்த வீடியோவை பார்த்துவிட்டு, நீ ராதிகா ஆப்தே வீட்டுக்கு செல்கிறாயா? என்று கேட்டதாக சொன்னார். என் வீட்டு காவலாளி அந்த வீடியோவை பார்த்திருந்தார். அப்படியான விஷயங்களை எதிர்கொள்வது மிகவும் கடினம்.

என் அந்தரங்க வீடியோவை காவலர், டிரைவர் பார்த்துட்டாங்க..3 நாள் வெளியே வரல!! ராதிகா ஆப்தே ... | Radhika Apte About A Deeply Distressing Experience

உதவியாளர், கார் டிரைவர்

இறுதியாக நான் என் உதவியாளர், கார் டிரைவர் இருவரையும் அழைத்து, என் வீடியோ ஒன்று கசிந்துள்ளது, அதை நீங்கள் பார்த்தீர்களா? பார்க்கவில்லை என்றால் நானே அனுப்புகிறேன், நீங்கள் அதை பார்த்துக் கொள்ளுங்கள்.

அதன்பின் உங்களுக்கு சம்மதம் என்றல் எனக்கு பாதுகாப்பாக இருங்கள், அப்படியில்லை என்றால், நீங்கள் இப்போதே கிளம்பலாம். உங்களுக்கான சம்பளத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். அதற்கு அவர்கள் நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என்று கூறினார்கள் என ராதிகா எமோஷனலாக பேசியுள்ளார்.