3 மணி நேரம் அப்படி நடந்தது, என்னால் கழிவறைக்கு கூட போக முடியல.. ரஜினி பட நடிகை வேதனை
Rajinikanth
Radhika Apte
Indian Actress
Actress
By Dhiviyarajan
பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான கபாலி படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ராதிகா ஆப்தே.
இவர் சேக்ரட் கேம்ஸ், லஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற வெப் தொடர்களில் படு கவர்ச்சியாக நடித்து சென்சேஷனல் நடிகையாக மாறினார். தற்போது விஜய் சேதுபதி கத்ரீனா கைப் நடிப்பில் வெளியான மேரி கிறிஸ்துமஸ் படத்தில் ராதிகா ஆப்தே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ராதிகா ஆப்தே தனது சோசியல் மீடியா பக்கத்தில், "இன்று காலை 8 மணிக்கு விமான நிலையத்தில் மாட்டிக்கொண்டேன். அங்கு எந்தவொரு வசதியும் இல்லை. தண்ணீர் குடிக்க முடியவில்லை, கழிவறைக்கும் செல்ல வழி இல்லை சுமார் 3 மணி நேரம் அடைந்து கிடக்கிறேன்" என்று ராதிகா ஆப்தே பதிவிட்டுள்ளார்.