நமிதாவை தூக்கி ரொமான்ஸ் செய்த கணவர்!! சரத்குமாரிடம் மனைவி ராதிகா சொன்ன அந்த வார்த்தை
ராதிகா சரத்குமார்
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருபவர் தான் நடிகை ராதிகா சரத்குமார். தற்போது அவர் நடிப்பில் தாய் கிழவி படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தினை சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் நிலையில், ராதிகா அளித்த பேட்டியொன்றில் தன் கணவர் சரத்குமார் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

நமிதாவை தூக்கி
அதில், நான் செம பிஸியாக சின்னத்திரை விஷயங்களை கவனித்துக் கொண்டும், நடித்துக்கொண்டும், குடும்பத்தை பார்த்துக்கொண்டும் செம பிஸியாகவும் பரபரப்பாகவும் இருக்கிறேன்.

அப்போது அவர் நமிதாவுடன் ஏய் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நமிதாவை தூக்கிக் கொண்டு நடனமாடிக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து நான் அவரிடம் ஒருமுறை கேட்டேவிட்டேன். நமிதாவை தூக்குறீங்க, என்னை தூக்க மாட்டீங்களா? என்று கேட்டேன்.
ஆனால் அவர் அதை மறக்காமல், நடிகர் சங்க நிகழ்ச்சி வெளிநாட்டில் நடந்தபோது, என்னை அவர் தூக்கினார். அதுவும் ஒரே கையில் தூக்கினார் என்று ராதிகா பகிர்ந்துள்ளார்.