நயன்தாரா, விக்கி காதல்!! வெட்கமா இல்லையா என்று ராதிகாவிடம் கேட்ட தனுஷ்.. இப்படியெல்லாம் நடந்திருக்க

Dhanush Nayanthara Tamil Cinema Actress
By Bhavya Nov 18, 2024 04:30 AM GMT
Bhavya

Bhavya

in Celebrity
Report

நயன்தாரா, விக்கி காதல்

 தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் அவ்வப்போது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி சில நாட்களுக்கு முன் தங்களுடைய ஆவணப்படத்தின் டிரைலர் வீடியோவை வெளியிட்டனர்.

அந்த வீடியோவில் நானும் ரவுடி தான் படத்தின் 3 நொடி காட்சி இருந்ததால் நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து 10 கோடி நஷ்டயீடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.

நயன்தாரா, விக்கி காதல்!! வெட்கமா இல்லையா என்று ராதிகாவிடம் கேட்ட தனுஷ்.. இப்படியெல்லாம் நடந்திருக்க | Radhika Say Dhanush Scolded Her Badly

இதனால் கோபப்பட்ட நயன்தாரா, தனுஷை மோசமாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், ஆவணப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில், நேற்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி ஒளிபரப்பப்பட்டது.

இதில், நடிகர் தனுஷ் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதல் குறித்து விமர்சித்துப் பேசியதாக கூறி நடிகை ராதிகா பேசும் காட்சிகள் அந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

ராதிகா பேட்டி

அதாவது, இது குறித்து ராதிகா பேட்டி ஒன்றில் பேசியிருப்பார். அதில், "நானும் ரவுடி தான் படத்தின் போது நயன்தாராவின் காதல் குறித்து தனுஷ் தான் என்னிடம் போன் செய்து தெரிவித்தார்.

நயன்தாரா, விக்கி காதல்!! வெட்கமா இல்லையா என்று ராதிகாவிடம் கேட்ட தனுஷ்.. இப்படியெல்லாம் நடந்திருக்க | Radhika Say Dhanush Scolded Her Badly

நான் முதலில் அதை நம்பவே இல்லை பின் தனுஷ் என்னிடம் வெட்கமா இல்லையா நீங்கள் பெரிய நடிகை என்று தான் பெயர் ஆனால் உங்கள் கண் முன் நடப்பதை கூட உங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறினார்" என தெரிவித்துள்ளார்.

தற்போது இதை பிரதிபலிக்கும் வகையிலான காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.