நடிகை ராதிகா மகனா இது? ஆளே மாறிட்டாரே.. எப்படி உள்ளார் பாருங்க!
ராதிகா
தமிழ் சினிமாவை தாண்டி சின்னத்திரையிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ராதிகா. வெள்ளித்திரையில் செம பிஸியான நாயகியாக வலம் வந்தவர் இப்போது தரமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
சின்னத்திரை பக்கம் சித்தி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தவர் தொடர்ந்து அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சந்திரகுமாரி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.
ஆனால் இடையில் இனி சீரியல்களில் நடிக்கப்போவதில்லை என்றவர் அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார்.

ஆளே மாறிட்டாரே!
இந்நிலையில், சமூக வலைதளங்களில் அடிக்கடி ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ராதிகா, தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் எடுத்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் நடுவில் ராதிகா, ஒருபுறம் கணவர் சரத்குமார், மறுபுறம் மகன் ராகுல் என மூவரும் அழகாக நிற்கின்றனர். அதை கண்ட ரசிகர்கள் ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? பெரிதாக வளர்ந்து விட்டாரே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
