கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு நிலைமையா?. வசூலில் தள்ளாடும் ரகு தாத்தா!!

Keerthy Suresh Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 17, 2024 07:45 PM GMT
Report

மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

கீர்த்தி சுரேஷ், குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை பிடித்துவிட்டாலும், அதிக ட்ரோல்களையும் ஒரு பக்கம் சந்தித்தார். இவர் மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றாலும், அடுத்தடுத்த படங்களில் நடிப்பில் கோட்டை விட்டுவிட்டார் என்ற விமர்சனமும் இருக்கிறது.

இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளிவந்த ரகு தாத்தா படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

தங்கலான், டிமான்ட்டி காலனி 2 போன்ற படங்கள் வெளியான அதே தினத்தில் கீர்த்ஸ் சுரேஷின் ரகு தாத்தா திரைப்படமும் திரையரங்குகளில் வெளிவந்தது. இதனால், ரகு தாத்தா படத்திற்கு குறைவான தியேட்டர்களும் காட்சிகளும் கிடைத்தன.

இந்நிலையில், ரகு தாத்தா படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, இப்படம் இரண்டு நாட்களில் வெறும் ரூ. 35 லட்சம் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.  

கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு நிலைமையா?. வசூலில் தள்ளாடும் ரகு தாத்தா!! | Raghu Thatha Movie Box Office Report