15 மாத போராட்டம்!! மனைவியை விவாகரத்து செய்த சிஎஸ்கே வீரர் ராகுல் சாஹர்..
இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமீபகாலமாக தங்களது மனைவியை பிரிந்து விவாகரத்து பெற்று வரும் சம்பவம் அதிகரித்துள்ளது. அப்படி ஹர்திக் பாண்டியா, யுவேந்திர சாஹல், மொகமது சமி உள்ளிட்ட பலர் விவாகரத்து பெற்றனர். அந்த பட்டியலில் மேலும் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் இணைந்துள்ளார்.
ராகுல் சாஹர்
இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை அணி வீரருமான ராகுல் சாஹர், கடந்த 2022ல் இஷானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகல் சிறப்பாக வாழ்ந்து வந்த ராகுல் சாஹர், தன் மனைவியை பிரிவதாக கூறியிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட ஒரு பதிவில், கடந்த 15 மாதங்களாக தான் சந்தித்த சட்டப்போராட்டங்கள் குறித்தும் அது தனக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

15 மாத போராட்டம்
நான் மிகச்சிறிய வயதில் திருமண பந்தத்தில் நுழைந்துவிட்டேன். என்னைப்பற்றியோ, என் தகுதி குறித்தோ அல்லது என் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியோ முழுமையாக புரிந்து கொள்வதற்கு முன் இது நடந்துவிட்டது. அதைத்தொடர்ந்து வந்த ஆண்டுகள் நான் சற்றும் எதிர்பாராத பல பாடங்களை எனக்கு கற்றுக்கொடுத்தது. கடந்த 15 மாதங்களாக நீதிமன்றத்தில் அலைந்தது எனக்கு பொறுமையையும் மன உறுதியையும் கற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு பின் இன்று என் வாழ்க்கையின் அந்த அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த அத்தியாயத்தை நான் கோபத்துடனோ அல்லது வருத்ததுடனோ முடிக்கவில்லை. மிகவும் தெளிவாகவே இந்த முடிவை எடுத்துள்ளேன். சில உறவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிப்பதில்லை, அவை நம்ம விழிப்படையச் செய்யவும் சில பாடங்களை கற்றுக் கொடுக்கவும் வருகிறது.
இது ஒரு முடிவல்ல, இது ஒரு புதிய தொடக்கம். இனி நான் எடுக்கும் முடிவுகள் என் சுயமரியாதை மற்றும் அமைதியை சார்ந்தே இருக்கும். எந்தவொரு கசப்பான உணர்வுகளையும், நான் சுமந்து செல்லவில்லை. பாடங்களையும் கண்ணியத்தையும் மீண்டும் தொடங்குவதற்கான தைரியத்தியும் மட்டுமே எடுத்துச் செல்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார் ராகுல் சாஹர். காதலித்து திருமணம் செய்து கொண்ட ராகுல் சாஹர் - இஷானி இருவரும் சட்டப்பூர்வமாக தற்போது விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.