இரவுபார்ட்டியில் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட பிக்பாஸ் நடிகை!! ஷாக்காகும் ரசிகர்கள்..

Viral Video Coffee with Kadhal
By Edward Dec 15, 2022 02:55 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடித்த விஐபி 2 படத்தில் வில்லிக்கு பிஏ-வாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் ரைசா வில்சன்.

வட இந்திய மாடலிங் பெண்ணாக பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ரைசா ஆள் அடையாளம் தெரியாமல் குண்டாக காணப்பட்டார். நிகழ்ச்சிக்குப்பின் உடல் எடையை குறைத்து கிளாமர் லுக்கில் கலக்கினார்.

நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இஸ்பட்டே ராஜாவும் இதயராணியும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார். இதன்பின் வாய்ப்பிற்காக கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

சமீபத்தில் அவரது பாரம்பரிமுறையில் நடைபெற்ற தோழியின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று அதன்புகைப்படத்தையும் வெளியிட்டார். தற்போது காஃபி வித் காதல் படத்தின் பார்ட்டி பாடலில் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.