சந்தியாவிற்கு என்ன ஆனது! ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் ராஜா ராணியின் பிரமோ வீடியோ..

serial television rajarani2 alyamanasa rajarani
By Edward Sep 16, 2021 08:49 AM GMT
Report

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலங்கள் தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து கொடிக்கட்டி பறந்து வருவதுண்டு. ஆனால் ஒருசில நட்சத்திரங்கள் சின்னத்திரையில் அப்படியே நடித்து பணியாற்றி கொண்டே இருப்பார்கள். அப்படி பிரபல தொலைக்காட்சி சேனலில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் ராஜா ராணி.

சஞ்சீவ், ஆலியா மானசா இருவரும் இணைந்து நடித்து பின் ரியல் ஜோடிகளாக திருமணம் செய்து ஒரு மகளையும் ஈன்றுள்ளனர். இதையடுத்து குழந்தை பிறந்த பிறகு ஆலியா மீண்டும் சீரியலில் நடிக்க ராஜா ராணி 2 சீசனில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் அந்த சீரியலில் சரவணன் சந்தியாவை விட்டு பிரியும் காட்சிகள் அமைந்து வருகிறது. சீரியலில் பிரமோ வீடியோ இணையத்தில் வெளியாகி சுமார் 50 ட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

வீட்டைவிட்டு செல்லும் சந்தியா, பேருந்தில் ஏறி சென்று கொண்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகி பலர் காயமடைகிறார்கள். இதை பார்த்து சரவணன் சந்தியாவை தேடி கதறி அழுது பின்னர் இருவரும் கட்டியணைக்கும் காட்சிகள் தான் தற்போது இணையத்தை ஈர்த்து வருகிறது.