சீரியலில் இருந்து விலகிய ராஜா ராணி நடிகை!! காவியாவாக இனிமேல் இவரா..
பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய்யின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் ராஜா ராணி 2. ஆரம்பத்தில் காவியா கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்து வந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் காரணத்தால் சீரியலில் இருந்து விலகினார்.
அதன்பின், காவியாவாக மாடல் ரியா விஸ்வநாதன் நடித்து வருகிறார். இந்நிலையில் திடீரென ரியா, இனிமேல் நான் காவியா இல்லை என்றும் சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகுவதாக வீடியோ ஒன்றினை பகிர்ந்தார்.
இதனால் ஷாக்கான ராஜ ராணி சீரியல் ரசிகர்கள் ஷாக்காகி யார் காவியாவாக நடிப்பார் என்று கேள்வியும் எழுந்து வந்தது.
இந்நிலையில் புதிய காவியாவாக கோகுலத்தில் சீதை என்ற சீரியல் நடித்து வந்த நடிகை ஆஹா கெளடா நடிக்கவுள்ளராம். அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க பாராட்டு கூறி ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
மேலும் என்னா தான் இந்த சீரியல் கதாநாயகிகளுக்கு பிரச்சனை ஆண்டுக்கு ஒரு நடிகை மாறிகிறார்களே என்று கேள்வி கேட்டும் வருகிறார்கள்.