சரிகமப சீனியர் 5!! விசா இல்லாமல் தவிக்கும் பிரஷான்.. டி ராஜேந்தர் சொன்ன கண் கலங்க வைக்கும் வார்த்தை
சரிகமப சீனியர் 5
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப சீசன் 4.
டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது.
இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மே 24 ஆம் தேதி முதல் ஆரம்பமானது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டி ராஜேந்தர் கலந்து கொண்டார்.
தற்போது, சரிகமப சீனியர் 5ல் இலங்கையை சேர்ந்த சுவிஸ் வாழ் இலங்கை தமிழர் பிரஷான் கலந்து கொண்டுள்ளார்.
பிரஷான், இலங்கை குடியுரிமை இல்லாமலும், சுவிஸ் குடியுரிமை இல்லாமலும் 30 நாள் விசாவில் இந்தியா வந்து சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியில் பாடியிருப்பது அனைவரது மனதையும் உருக வைத்தது.
டி ராஜேந்தர் சொன்ன வார்த்தை
இந்நிலையில், வாழ்க்கையுடைய நிலைமையை பார்க்கும்போது மனசு மிகவும் பாரமாக உள்ளது. இங்கு ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு நாழிகைக்கும் ஒவ்வொரு தினத்திற்கும் கடவுள் ஒரு கணக்கு வைத்து இருக்கிறான்.
இந்த சரிகமபவின் சங்கீத குடும்பம் உன்னை மறக்காது. எங்கள் நெஞ்சங்களில் எல்லாம் உன்னை சுமக்கிறோம் என்றும் வாழ்க பல்லாண்டு" என்று ராஜேந்தர் பேசியுள்ளார்.