விஜய் அரசியல் வருகையால் பிரயோஜனம் இல்லை.. ரஜினி சகோதரர் பேச்சால் வெடித்த பிரச்சனை

Rajinikanth Vijay Tamil Cinema Tamil Actors
By Bhavya Nov 07, 2024 04:41 AM GMT
Report

நடிகர் விஜய் 

சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தற்போது அரசியலில் களமிறங்கி உள்ளார் நடிகர் விஜய். சமீபத்தில், தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மிகவும் பிரமாண்டமாக நடத்தி முடித்தார்.

விஜய் அரசியல் வருகையால் பிரயோஜனம் இல்லை.. ரஜினி சகோதரர் பேச்சால் வெடித்த பிரச்சனை | Rajini Brother About Vijay Politics

முதலில் கட்சி பெயர், அடுத்து கொடி, கடைசியாக தனது கொள்கைகளை அறிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் வருகைக்கு பல சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்தாலும் ஒரு சிலர் இந்த முடிவுக்கு நெகடிவ் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.

ரஜினி சகோதரர் பேட்டி 

இந்நிலையில், நடிகர் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.

அதில், "விஜய் அரசியல் வர வேண்டும் என்ற ஆசையில் வந்து விட்டார். ஆனால், அவர் வருகையால் எந்த பிரயோஜனமும் இல்லை அவரால் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது.

விஜய் அரசியல் வருகையால் பிரயோஜனம் இல்லை.. ரஜினி சகோதரர் பேச்சால் வெடித்த பிரச்சனை | Rajini Brother About Vijay Politics

கமல்ஹாசன் நினைத்தது போன்று இவரும் அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அது மிகவும் கஷ்டம் இருப்பினும் முயற்சி செய்யட்டும்" என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் ரஜினிகாந்த் நடிகர் விஜய் அரசியல் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், ரஜினியின் சகோதரர் கூறிய இந்த விஷயம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.