சூப்பர் ஸ்டார்-னா எங்களுக்கு ரஜினி சார்தான்!! பாலிவுட்டை அதிரவிட்ட சூர்யா..

Rajinikanth Suriya Gossip Today Bollywood Kanguva
By Jai Oct 24, 2024 07:30 AM GMT
Report

கங்குவா

இயக்குநர் சிறத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகவுள்ளது.

படத்தின் பிரமோஷனுக்காக முதல் பாலிவுட் பக்கம் சென்று பிரமோட் செய்து வருகிறார்கள் படக்குழுவினர். அந்தவகையில் சமீபத்தில் பாலிவுட்டில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில், சூர்யாவை சூப்பர் ஸ்டார் என்று தொகுப்பாளர் கூறி அழைத்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார்-னா எங்களுக்கு ரஜினி சார்தான்!! பாலிவுட்டை அதிரவிட்ட சூர்யா.. | Rajini Sir Is The Only Superstar For Us Suriya

சூப்பர் ஸ்டார்

அதற்கு சூர்யா, சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார் தான். ஒரு பெயரை நீக்கிவிட்டு அது ஒரு பேட்ஜ் போன்று யாருக்கும் அதை கொடுக்க முடியாது என்று சூர்யா கூறியிருக்கிறார்.

அதற்கு அரங்கில் இருந்த பத்திரிக்கையாளர்களும் திஷா மற்றும் பாபி திஷோலும் புன்னகைத்தப்படி ரியாக்ஷன் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பரவ, நெட்டிசன்கள் பலர் முக்கிய நடிகரின் ரசிகர்களை சீண்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.