அண்ணாத்த படத்திற்கு பிறகு படங்கள் இருக்காதா? ரஜினிகாந்த் கூறியது இதுதானாம்!

dhanush rajinikanth annathe
By Edward May 27, 2021 10:40 AM GMT
Report

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் நடிகராக தனக்கென ஒரு மாறுபட்ட நடிப்பை காட்டி உலக தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று அனைவரால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் சமீபத்தில் நடித்த படங்கள் ஏமாற்றத்திலேயே முடிந்தது. தற்போது அண்ணாத்த படப்பிடிப்பினை முடித்துவிட்டு சென்னை திரும்பி இருக்கிறார் ரஜினிகாந்த்.

வரும் தீபாவளியன்று திரைக்கு வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்து சென்னை வீட்டில் ஓய்வு எடுத்த பின் சில மாதங்களில் அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்யவிருக்கிறாராம். நடிகர் தனுஷ் ஹாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவருடன் மனைவி ஐஸ்வர்யா குழந்தைகளுடன் அமெரிக்காவில் தங்கி வருகிறார்.

அமெரிக்காவிற்கு பரிசோதனைக்கு திட்டமிட்டு இருந்த ரஜினி அங்கேயும் செல்லலாம் என்ற திட்டமும் இருக்கிறதாம். கொரானா சென்னையில் எப்படி இருக்கும் நிலையை வைத்தே அடுத்த பயண திட்டம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

அதற்கு பதிலாக அண்ணாத்த படக்குழுவினரிடம் சில தகவல்களை கூறியுள்ளாராம் சூப்பர் ஸ்டார். அண்ணாத்த படம் அவரது வாழ்க்கையில் முக்கியமான படம் என்றும் எப்படியாவது முடித்து கொடுக்க வேண்டும் என்ற கவலை இருந்தது. தற்போது படப்பிடிப்பினையும் முடித்துவிட்டேன். அடுத்த படங்களில் அதாவது ஒன்றில்லது இருபடங்களில் தொடர்ந்து நடிக்க எனக்கு ஆசை உள்ளது.

ஆனால், என் உடல் ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை. கொரானா வைரஸின் தாக்கம் பொருத்துதான் முடிவு எடுப்பேன் என்றும் கூறியுள்ளார். எல்லாம் நல்லபடி முடிந்தது வீட்டிற்கு சென்று பத்திரமாக இருங்கள்.

மீதி பணிகள் கொரோனா குறைந்த பிறகு பார்க்கலாம் என்று கூறியுள்ளார் ரஜ்னிகாந்த். அடுத்த படத்தில் தனுஷ் இயக்கவிருக்கிறார் என்ற தகவலும் கசிந்து வருகிறது.