விஜய்யின் கோட் வசூல் தொடாத வேட்டையன்.. ரஜினி படத்திற்கு இந்த நிலைமையா
Rajinikanth
Vijay
Greatest of All Time
Vettaiyan
By Karthick Raja
நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படம் வெளிவந்தது. ரஜினியின் படம் என்றாலே கண்டிப்பாக வசூல் வேட்டையன் உறுதி.

அந்த வகையில் வேட்டையன் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளன. இது மாபெரும் வசூலாக இருந்தாலும், விஜய்யின் கோட் படத்தின் முதல் நாள் வசூலை விட இது குறைவு என சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடித்து கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்த படம் கோட். இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 95 கோடி முதல் ரூ. 100 கோடி வரை வசூல் செய்தது.

ஆனால், சூப்பர்ஸ்டார் ரஜினியின் வேட்டையன் உலகளவில் முதல் நாள் ரூ. 72 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ள நிலையில், கோட் படத்தின் வசூலை வேட்டையன் படத்தால் தொடமுடியவில்லை என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.