ரஜினியை நம்பவைத்து ஏமாற்றிய இசைஞானி!! 28 வருட பகையை மறக்காமல் பழிவாங்கும் சூப்பர் ஸ்டார்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே நமக்கு நியாபகம் வரும் மனிதர்கள் என்றால் இளையராஜா, எஸ்பிபி தான். அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பல படங்களுக்கு இருவரின் கூட்டணி இருந்துள்ளது.
இளையராஜாவின் தலைக்கனம்
ஆனால் இளையராஜாவின் இசை இன்று வரை ரஜினிகாந்திற்கு பெருமையை சேர்த்து வருகிறது. ஆனால் வீரா படத்திற்கு பின் ரஜினிகாந்த், இளையராஜாவை துளிக்கூட மதிக்காமல் அவர் இசையே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து வருகிறார்.
இருவரும் வெளியில் நட்பாக பேசிக்கொண்டு நடித்தாலும், உள் மனதில் ரஜினிகாந்திற்கு இசைஞானியிடம் வன்மம் இருந்து வருகிறது. இதற்கு காரணம் இளையராஜாவின் தலைக்கனம் தான் காரணம்.
உழைப்பாளி
வீரா படத்திற்கு முன் சூப்பர் ஸ்டார் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உழைப்பாளி படம் வெளியானது. இப்படத்தில் இசையை இளையராஜா தான் இசையமைக்க ஆரம்பித்தார். ஆனால் பாதியில் இசையை முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு பறந்து அதிர்ச்சியாக்கினார்.
இதனால் ரஜினிக்கு மிகப்பெரிய மனக்கசப்பு ஏற்பட்டு கோபத்தில் இருந்துள்ளார். பின் அப்படத்தின் மீதியை கார்த்திக் ராஜா தான் முடித்துக்கொடுத்துள்ளார். இதனால் தான் மேடையில் ரஜினிகாந்த் இளையராஜாவை அவமதித்து ஒருமுறை பேசியிருப்பார்.