எனக்காக தனுஷ் நல்ல கதை வைத்திருந்தார் ஆனாலும் நடிக்கவில்லை!! ரஜினி சொன்ன காரணத்தை பாருங்கள்

Dhanush Rajinikanth Actors Tamil Actors
By Dhiviyarajan Feb 07, 2024 09:07 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணம் ஆகி 15 ஆண்டுகள் பிறகு அவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். தற்போது இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்திற்கு கூட தனுஷ் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பிரிந்த பிறகு இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் லால் சலாம் படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. ரஜினி லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், நான் எப்போதும் பெரிய இயக்குனர்களிடம் பணியாற்றி பழகிவிட்டேன். அதனால் தான் மகள் இயக்கத்தில் நடிக்க தயங்கினேன்.

கோச்சடையான் படத்தில் நடிக்கும் போதும் கூட சௌந்தர்யாவுக்கு பதில் கே.எஸ்.ரவிக்குமார் வந்து தான் ஆக்ஷன், கட் சொல்ல வேண்டும் என கூறினேன். தனுஷ் கூட எனக்கு இரண்டு நல்ல கதைகள் சொன்னார். அருமையான கதைகள் ஆனால் நடிக்க மறுத்துவிட்டேன், நான் நோ சொன்ன காரணம் அவருக்கு தெரியும். அதை புரிந்து கொண்டார் என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார்.