சுயமரியாதையை இழந்துவிட்டார் சூப்பர் ஸ்டார்!..51 வயது யோகி காலில் விழுந்த ரஜினி..ரசிகர்களின் கருத்து

Rajinikanth Actors Yogi Adityanath Jailer Tamil Actors
By Dhiviyarajan Aug 20, 2023 04:50 AM GMT
Report

இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார்.இவருக்கென உலக மெங்கும் பல ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 10 -ம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் இமயமலை பயணத்தை தொடர்ந்து ரஜினி, உத்தரப்பிரதேசம் சென்று பாஜகவை சேர்ந்த உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதற்கு சிலர், 51 வயதான யோகி ஆதித்யநாத் காலில் 72 வயது ரஜினி விழுந்துள்ளார். அவர் மீது வைத்திருந்த மரியாதை போய்விட்டது. ரஜினிகாந்த் தன்னுடைய மரியாதையை அவரே கெடுத்து கொள்கிறார் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.