வேட்டையன் வசூல் ஃபிளாப்.. முழு காரணமே சூப்பர் ஸ்டார்தான்!! பிரபலம் ஓப்பன் டாக்..

Rajinikanth Vijay Gossip Today Vettaiyan
By Edward Oct 21, 2024 02:30 AM GMT
Edward

Edward

in Gossip
Report

வேட்டையன்

இயக்குநர் த செ ஞானவேல் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அபிஷேக் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வெளியான படம் வேட்டையன்.

வேட்டையன் வசூல் ஃபிளாப்.. முழு காரணமே சூப்பர் ஸ்டார்தான்!! பிரபலம் ஓப்பன் டாக்.. | Rajinikanth Reason Vettaiyan Box Office Collapse

படம் வெளியாகி 10 நாட்களாகியுள்ள நிலையில் ரூ. 239 கோடி வசூலை அள்ளியுள்ளது. படத்தின் வசூல் குறைவாக இருந்தாலும் வேட்டையன் படத்தால் லைக்கா நிறுவனத்திற்கு லாபம் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் கூறப்பட்டு வருகிறது.

தற்போது பத்திரிக்கையாளர் அந்தணன் அளித்த பேட்டியொன்றில், வேட்டையன் படம், வசூலில் மாபெரும் வெற்றி பெற வேண்டிய படம்.

சூப்பர் ஸ்டார்

ஆனால் படத்தினை விஜய் ரசிகர்கள் காலி செய்ய நினைக்க முக்கிய காரணமே சூப்பர் ஸ்டார் தான். இந்த பிரச்சனையை இருவருமே அதாவது ரஜினி, விஜய் இருவருமே முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். அப்படி அவர்கள் இருவரும் அதை செய்யாமல் விட்டதன் விளைவு தான் கோட், வேட்டையன் படத்தின் வசூல் பாதிக்கப்பட காரணம்.

வேட்டையன் வசூல் ஃபிளாப்.. முழு காரணமே சூப்பர் ஸ்டார்தான்!! பிரபலம் ஓப்பன் டாக்.. | Rajinikanth Reason Vettaiyan Box Office Collapse

ரஜினிகாந்த் ஆடியோ லான்சில் ஏன் அவ்வாறு பேசவேண்டும். அங்கே ஆரம்பித்து இப்போதுவரை நீடிக்கிறது. விஜய் ரசிகர்கள் இதனால் தான் வேட்டையன் படத்தின் வசூலை பாதிக்கும் வண்ணம் நடந்து கொண்டனர். விஜய் இப்போது அரசியல் கட்சி தொடங்கிவிட்டதால் அவருக்கு எதிர்காலத்தில் வசூல் பிரச்சனையை கொண்டுவராது.

சூப்பர் ஸ்டாருக்கு இந்த பிரச்சனை தொடரும். இந்த பிரச்சனைக்கு முடிவுக்கட்ட விஜய் தயாராகவே உள்ளார். விரைவில் விஜய், ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் விருந்து சாப்பிட்டு வர திட்டமிட்டும் வருகிறார் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.