விமானத்தில் சத்தம் போட்ட ரசிகர்!! ரஜினி செய்த தரமான விஷயம்..

Rajinikanth Tamil Cinema Tamil Actors
By Bhavya Aug 07, 2025 01:30 PM GMT
Report

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது, இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

இந்த படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜெயிலர் 2- ம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விமானத்தில் சத்தம் போட்ட ரசிகர்!! ரஜினி செய்த தரமான விஷயம்.. | Rajinikanth Say Hi To Fans Video Goes Viral

 தரமான விஷயம்

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமானத்தில் சென்ற போது, அவரை விமானத்தில் பார்த்த ரசிகர் ஒருவர் அவரின் முகத்தை காட்டுமாறு கூறியுள்ளார்.

உடனே எழுந்து நின்று ரஜினிகாந்த் ரசிகர்களை நோக்கி கையசைத்து, சிரித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,