செய்தியாளர் கேட்ட அந்த கேள்வி.. விரலை நீட்டி எச்சரித்த ரஜினி!! அப்படி என்ன ஆச்சு
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த வேட்டையன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நாடு முழுவதும் பல்வேறு இடத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது, தாய்லாந்தில் சில முக்கிய காட்சிகளை படமாக்க ரஜினிகாந்த் அங்கே கிளம்பிச் சென்றிருக்கிறார். அப்போது, செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து பல கேள்விகளை கேட்டனர்.
அப்படி என்ன ஆச்சு
அதில், தாய்லாந்தில் வரும் ஜனவரி 13ம் தேதி முதல் 25ம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இதுவரை 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.
அப்போது, செய்தியாளர் ஒருவர் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாதிப்புகள் தற்போது அதிகரித்துக் கொண்டே போகிறதே என்ற கேள்வியை எழுப்ப, அதற்கு அரசியல் தொடர்பான கேள்வியை கேட்கக் கூடாது என்று ஏற்கனவே சொல்லியிருக்கேன் என விரலை நீட்டி சிரித்துக் கொண்டே எச்சரித்து உள்ளார்.
தற்போது இதற்கு, கருத்து சொல்லிவிட்டு சென்றிருக்கலாமே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.