மனைவி லதாவுடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளாரா ரஜினிகாந்த்.. என்ன நெல்சா இதெல்லாம்
Rajinikanth
Jailer
By Kathick
ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திலிருந்து கிலிம்ப்ஸ் டீசர் வீடியோ ஒன்று நேற்று வெளிவந்தது.
ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டனர். இந்த கிலிம்ப்ஸ் டீசர் வீடியோவில் இடம்பெறும் காட்சி ஒன்றில் ரஜினி மற்றும் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இடம்பெறுகிறது.
இதை கவனித்த பலரும், ஜெயிலர் படத்தில் லதா ரஜினிகாந்த் நடிக்கிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவேளை ரஜினி - லதா ரஜினிகாந்தின் புகைப்படத்தில் சற்று பார்ப்ஃபிங் செய்து லதா ரஜினிகாந்திற்கு பதில் ரம்யா கிருஷ்ணன் இருப்பாரோ என்றும் கூறப்படுகிறது. இதோ அந்த புகைப்படம்..
