இரவில் குடித்துவிட்டு அந்த மாதிரியான டார்ச்சர் கொடுத்தார்.. பகிர் கிளப்பும் ராஜ்கிரண் வளர்ப்பு மகள்
நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள், சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் முனிஸ் ராஜாவை பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டார். இதனால் ராஜ்கிரண் மற்றும் அவரது மகள் இடையே பிரச்சனை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ராஜ்கிரண் மகள், திருமணம் ஆன முதல் மாதத்தில் இருந்து எனக்கும் அவருக்கும் பிரச்சனை தொடக்கிவிட்டது. குடித்துவிட்டு கண்டபடி அடிப்பார், மோசமாக பேசுவார் . காலையில் எழுந்த உடன் இரவு என்ன நடந்தது என்று தெரியாதது போல தெளிவாகவே இருப்பார்.
ஆரம்பத்தில் இவருடைய இந்த குடிப்பழக்கத்தை மாற்றி விடலாம் என்று நான் நம்பினேன். ஆனால், அது என்னால் முடியவில்லை.
அதுமட்டுமின்றி காசு கேட்டு அடிக்கடி டார்ச்சர் செய்வார். பிரிந்து செல்லலாம் என நினைத்தால் எனது மொத்த குடும்பத்தையும் அசிங்கப்படுத்துவேன் என மிரட்டிவந்தார். இந்த சூழலில் என் அப்பா தான் என்னை பார்த்துக்கொண்டார்.