சின்ன பொண்ண இருந்தாலும் பரவால்ல.. மீனா தான் வேணும்.. அடம்பிடித்த 76 வயது நடிகர்!!
ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான மீனா, ராஜ்கிரண் நடிப்பில் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த "என் ராசாவின் மனசிலே" படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் போது மீனாவுக்கு வயது வெறும் 15 தான்.
இந்நிலையில் பிரபல நடிகர் ராஜ்கிரண், என் ராசாவின் மனசிலே படத்தில் மீனாவை ஹீரோயினாக நடிக்கவைத்தது குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், என் ராசாவின் மனசிலே என்ற படத்திற்கு ஹீரோயின் தேடிக்கொண்டிருக்கும்போது, ஒரு பத்திரிகையில் மீனாவின் போட்டோவை பார்த்தேன். அதன் பின் நான் கஸ்தூரி ராஜாவிடம் சென்று, இந்த பொண்ணு இந்த படத்திற்கு ஹீரோயினாக பொருத்தமாக இருப்பார் என்று சொன்னேன்.
அதற்கு கஸ்தூரி ராஜா, சார் ரொம்ப சின்ன பொண்ணா இருக்காங்க என்றார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள சோழையம்மா ரோலுக்கு மீனா தான் கரெக்ட்டா இருப்பார் என்று சொன்னேன். கடைசியில் அந்த படத்தில் மீனா நடித்து சூப்பர் ஹிட் ஆனது என்று ராஜ்கிரண் கூறியுள்ளார்.
You May Like This Video