சீரியலை நம்பி வாய்ப்பை இழந்து காணாமல் போன ரக்சனின் எக்ஸ்!! தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..
சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து வெள்ளித்திரையில் கொடிக்கட்டி பறந்தவர்கள் பலர். ஆனால் ஒருசிலருக்கு அது எட்டாமலே போகும். அப்படி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் விஜே ரக்சன்.
கலக்கபோவது யாரு, மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இடையில் வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் காமெடியனாகவும் அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்றார்.

ரக்சனுடன் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி காதல் கிசுகிசுக்களில் சிக்கியவர் தான் ஜாக்குலின். அதன்பின் இருவரும் சேர்ந்து எங்கும் செல்லாமல் பிரிந்துவிட்டனர். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நயன் தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் அவருக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜாக்குலின்.
இதன்பின் விஜய் டிவியில் முன்னணி கதாபாத்திரமாக தேன்மொழி பிஏ என்ற சீரியலில் நடித்தார். வெள்ளித்திரையில் சிறு ரோலில் நடிப்பதைவிட சீரியலில் முக்கிய ரோலுக்கு ஆசைப்பட்ட அந்த சீரியலில் நடித்தார்.

ஆனால் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறாமல் பாதியிலேயே மூடப்பட்டது. இதன்பின் எங்கு செல்வது என்று முழுத்து காணமலே போய்விட்டார் ஜாக்குலின். தற்போது உடல் எடையை குறைத்து பழைய ஜாக்குலினாக படுஒல்லியாக மாறி அடையாளம் தெரியாமல் மாறியுள்ள புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் ஜாக்குலின்.

