போதை பொருள் விஷயத்தால் அதிகம் இழப்பு! புலம்பி தள்ளிய பிரபல நடிகை..

drug gossips rakulpreetsingh
By Edward May 26, 2021 05:53 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தடையற தாக்க, என்னமோ ஏதோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்றவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு என்று முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.

இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற ரகுல் ப்ரீத் விஜய் தேவ்கனுடன் நெருக்கமாக நடித்து பாலிவுட் நடிகையாகவும் கொடிக்கட்டி பறந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் வழக்கில் போதை பொருள் விவகாரத்தில் இவரின் பெயரும் அடிபட்டது. இதனால் ரகுல் ப்ரீத் சிங் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்து அவரின் பெயரில் அவதூறு பரவியது.

இன்று வரை அவர்மீதான வதந்திகள் பரவிய நிலையில் நடிகை இதுபற்றி விளக்கமாக கூறியுள்ளார். சில மொழிகளில் வாய்ப்புகள் குறையும் போது மற்ற மொழிகளில் வாய்ப்புகள் வருகின்றன. அப்படி இருப்பதால் தான் என் சினிமா வாழ்க்கை நீடிக்கிறது. மொழி என்பது சினிமாவுக்கு பேதம் கிடையாது. இந்தியில் நான் சில படங்களில் நடித்த போது போதைபொருள் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் வந்த கிசுகிசுக்கள் இன்றுவரை என்னை பாதித்து வருகிறது. இதனால் பல இழப்புகள் நேர்ந்து கஷ்டப்பட்டேன். இதனால் படவாய்ப்புகளும் குறைந்தது. தாங்க முடியாத அளவிற்கு வேதனையை சமாளித்து பதிலளித்தும் குற்றச்சாட்டுக்கள் இன்னும் நிறுத்தவில்லை.

இதையடுத்து கிசுகிசுக்களுக்கு பதிலளிப்பதை நிறுத்திவிட்டதால் தற்போது எனக்கு எதிராக வரும் கிசுகிசுக்கள் குறைய ஆரம்பித்துள்ளது என்று கூறியுள்ளார். தற்போது இந்தியன் 2, அயலான் உள்ளிட்ட பல மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.