பட வாய்ப்புக்காக அதை செய்தேன், சினிமாவில் அப்படி தான்!! சிவகார்த்திகேயன் பட நடிகை
தெலுங்கு சினிமாவில் பல படங்களில் வந்த ரகுல் ப்ரீத் சிங், கடந்த 2012 -ம் ஆண்டு அருண் விஜய்யின் வெளியான "தடையறத் தாக்க" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து கார்த்தி நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது வெளியான அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரகுல் ப்ரீத் சிங், பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், தனது சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தன்னுடைய உழைப்பு, கடுமையான முயற்சி தான் என தெரிவித்து இருக்கிறார்.
மேலும் முயற்சியின் காரணமாகவே தான் இந்த நிலைக்கு வந்தேன், ஒரு நடிகையாக இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.