அச்சு அசல் உருவாக்கப்பட்ட பிரபல நடிகரின் தத்ரூப சிலை.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ
Viral Video
Ram Charan
Actors
By Bhavya
ராம் சரண்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ராம் சரண். தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான சிரஞ்சீவின் மகனான இவர் மகதீரா படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதை தொடர்ந்து ரங்கஸ்தலம், RRR ஆகிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். கடைசியாக இவர் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. தற்போது 'பெத்தி' படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார்.
ஷாக்கிங் வீடியோ
இந்நிலையில், தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு லண்டனில் தத்ரூப மெழுகு சிலை வடிக்கப்பட்டுள்ளது. தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை கண்டு ராம் சரண் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
'@AlwaysRamCharan with his wax statue at @MadameTussauds ... pic.twitter.com/U5BOXTKR7u
— Charan.. (@SSCharan_always) May 10, 2025