விஜய் டிவி-க்கு வாழ்க்கை கொடுக்கும் விஜே பிரியங்கா.. பயில்வானை வெச்சு செய்த ராமர்..

Bigg Boss Priyanka Deshpande Bayilvan Ranganathan
By Edward Sep 20, 2022 07:38 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி பல நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பு செய்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புபெற்று வருகிறது.

அப்படி பிக்பாஸ் 5 சீசனின் டைட்டில் வின்னர் ராஜுவை வைத்து ராஜு விட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை விஜே பிரியங்கா, மதுரை முத்து, ராமர் உள்ளிட்டவர்களை வைத்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்தவாரம் நடிகர் மன்சூர் அலி கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

பயின்வான் ரங்கநாதன்

இந்நிகழ்ச்சியில் நட்சத்திரங்களின் அந்தரங்க விசயத்தை அவதூறாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதனை போல் உளறுவாய் உலகநாதன் என்ற பெயரில் ராமர் நடித்து காட்டி கேலி செய்துள்ளார். அவர் எப்படி பேசுவாரோ அப்படியே ராமர் கிண்டல் செய்து கலாய்த்துள்ளார். அதேபோல் பிரியங்கா டெஸ்பாண்டே பற்றிய கிசுகிசு பற்றி மன்சூர் அலிகான் கேட்டுள்ளார்.

பிரியங்கா, ராஜு கிசுகிசு

எனக்கு விஜய் டிவி வாழ்க்கை கொடுக்கவில்லை, நான் தான் விஜய் டிவிக்கு வாழ்க்கை கொடுத்தேன் என்று கூறியுள்ளார். அதேபோல் ராஜு, பிக்பாஸ் 6 தொகுப்பாளராக ஆசைப்படும் விசயத்தை காமெடியாக பேசியுள்ளார் ராமர். இப்படி பயில்வான் ரங்கநாதனை படுமோசமாக கலாய்த்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.