விவாகரத்து செய்து நளினியுடன் வாழ்கிறேனா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராமராஜன்
ராமராஜன் - நடிகை நளினி
80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் ராமராஜன், நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு மகன் ஒரு மகள் இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களின் விவாகரத்துக்கு ஜோதிடக்காரர் ஒருவர் சொன்னதை கேட்டு ராமராஜன் விவாகரத்து செய்தார் என்று கூறப்பட்டது.
இது குறித்து இருவரும் பேட்டிகளில் பகிர்ந்து கொண்டும் இருக்கிறார்கள். சமீபத்தில் நளினி அளித்த பேட்டியில், இன்னும் ராமராஜனை காதலிப்பதாகவும் அவர் மீது மரியாதையும் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
வதந்தி
இதனையடுத்து ராமராஜன் அளித்த பேட்டியில், நானும் நளினியும் இணைந்துவிட்டதாக சிலர் பேசுகிறார்கள். நடக்காத விஷயத்தை நடந்த மாதிரி பேசுவதில் சிலருக்கு என்ன ஆனந்தமோ தெரியவில்லை. நான் தனிமையாக வாழ்வதற்கு பழகிவிட்டேன்.
நாங்கள் சேர்ந்துவிட்டதாக மீண்டும் சொல்வது எங்கள் இருவருக்குமே பெரிய மன துயரத்தை கொடுக்கும் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். எனக்கும் நளினிக்கும் எல்லாம் முடிந்துவிட்டது, முடிந்தது முடிந்ததுதான். இனிமே இப்படி இட்டுக்கட்டி பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள், சேர்ந்துவிட்டோம் என்று கூறும் வதந்திகளை பரப்பாதீர்கள் என்று ராமராஜன் தெரிவித்துள்ளார்.