ராமாயணா திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கடந்த 5-ஆம் தேதி வெளியான திரைப்படம் ராமாயணா பாகம் 1.
இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். Hans Zimmer மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான ராமாயணா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் முதல் நாளிலிருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், 3 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 360 கோடி வசூல் செய்துள்ளது.

பொறுப்பு துறப்பு: ராமாயணா திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்து இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.