ராமாயணா-வில் சீதா ஏன் எதிர்த்து போராடவில்லை!! சக்திமான் நடிகர் விமர்சனம்..
இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி பல கோடி வசூலித்து வரும் ராமாயணா பாகம் 1 படத்தினை பார்த்து பிரபலம் ஒருவர் விமர்சித்திருப்பது பலருக்கும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ராமாயணா
நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட இந்தியாவை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பில் பல ஆயிரம் கோடி செலவில் உருவாகி வெளியாகியுள்ளது ராமாயணா. படம் இதுவரை ரூ. 800 கோடிக்கும் மேலாக வசூலித்து வரும் நிலையில் படத்தினை சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.

அந்தவகையில் 90ஸ் கிட்ஸ்களில் ஃபேவரேட்டாக திகழ்ந்த சக்திமான் தொடரின் நாயகன் முகேஷ் கண்ணா ராமாயணா படத்தின் சீதா ரோலை விமர்சித்துள்ளார்.
முகேஷ் கண்ணா
அவர் கூறுகையில், நான் வால்மீகி ராமாயணத்தை படித்து இருக்கிறேன். அதில் வரும் சீதாதேவி எங்கும் சென்று சண்டை போட்டதாக குறிப்பிடப்படவில்லை. ஜான்சி ராணியை போல் சீதாதேவியும் போரிடுவதாக உங்களால் கற்பனை செய்ய முடியுமா? 14 ஆண்டுகால வனவாசத்தின்போது, சீதாதேவி எந்தப் போரிலும் பங்கேற்கவில்லை.

கரன், தூஷணன் ஆகியோருடன் நடைபெற்ற போரில் ராமர் மட்டுமே போரிட்டு அவர்களை வீழ்த்தினார். சிதாதேவியை வீராங்கனையாக காட்டியும், ராவணன் அவரை கடத்திச் சென்றபோது ஏன் சீதாவால் எதிர்த்துப் போரிட முடியவில்லை? பின் எப்படி அவரால் கடத்தப்பட்டு இருக்க முடியும்.
வெட்கப்பட வேண்டும்
நாங்கள் இக்கதைகளை கேட்டுத்தான் வளர்ந்தோம், சமீபத்துல் கூட ஒரு ராமலீலா நிகழ்ச்சியில், திடீரென சீதை சண்டையிடுவது, தற்காப்புக் கலைகளில் ஈடுபடுவது, வாள் வீசுவது என புதிய காட்சிகள் சேர்கப்பட்டு இருந்தன. இப்படி செய்வதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.

சீதையை ஒரு போராளியாக சித்தரித்தப்பதன் மூலம், நீங்கள் நவீன காலப்பெண்ணாக கவர முயற்சிக்கிறீர்கள். சிலர் இதை பெண்ணியம் என்கிறார்கள். பெண்ணியம் குறித்து எனக்கு புரிதல் இல்லை, ஆனால் எனக்கு தெரிந்தவரை அது பெண்களை வலிமையானவர்களாக காட்ட முயல்கிறது.
பெண்கள் வலிமையானவர்களாக இருக்கலாம், அதை நான் மறுக்கவில்லை, இருந்தாலும் ராமாயணத்தில் சீதை என்பவள் சீதை மட்டுமே, நவீன நோக்கங்களுக்காக அவளை பயன்படுத்தக் கூடாஅது, அது தவறானது என்று ராமாயணா படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய விமர்சனத்தை முன்வைத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் சக்திமான் புகழ் முகேஷ் கண்ணா.