NGK vs ராமாயணா கிராஸ் ஓவர்!! சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ரோலை டிரெண்ட்டாக்கும் நெட்டிசன்கள்..

Rakul Preet Singh Sai Pallavi Viral Video Ramayana
By Jai Nov 19, 2026 06:45 AM GMT
Report

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியான NGK படத்திற்கும் நித்திஷ் திவார் இயக்கத்தில் வெளியான ராமாயணா படத்திற்கும் இப்படியொரு காஸ்டிங்க் செலக்ஷன் இருப்பதை பார்த்து வியந்து வருகிறார்கள்.

NGK vs ராமாயணா கிராஸ் ஓவர்!! சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ரோலை டிரெண்ட்டாக்கும் நெட்டிசன்கள்.. | Ramayana Vs Ngk Cross Over Sai Pallavi Rakul Preet

NGK vs ராமாயணா

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான ராமாயணா படம் உலகளவில் இதுவரை சுமார் ரூ. 1520 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது. இதில், சீதையின் கணவர் ராமனை பார்த்து அவரை மணமுடிக்க முற்படும் சூர்ப்பனகை ரோலில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருப்பார்.

அதேபோல் NGK படத்தில் சாய் பல்லவியின் கணவர் சூர்யாவுடன் நெருக்கமாக இருக்கும் ரோலில் ரகுல் ப்ரீத் சிங்-ஐ நடிக்க வைத்திருப்பார் இயக்குநர் செல்வராகவன். செல்வராகவனின் இந்த படத்தை வைத்து தான் காஸ்டிங் செலக்ஷனை, இயக்குநர் நித்திஷ் திவாரி ராமாயணா படத்தில் உருவாக்கியுள்ளாரோ என்று நெட்டிசன்கள் கிராஸ் ஓவர் செய்து வருகிறார்கள்.

NGK vs ராமாயணா கிராஸ் ஓவர்!! சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ரோலை டிரெண்ட்டாக்கும் நெட்டிசன்கள்.. | Ramayana Vs Ngk Cross Over Sai Pallavi Rakul Preet

சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங்

இதனையடுத்து சாய் பல்லவி ராமாயணா படத்தில் சூர்ப்பனகையை பார்த்து பேசுவதை, NGK படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்து சாய் பல்லவி, சும்மா சொல்லக் கூடாது, நல்லா திம்முன்னு தான் இருக்கா.. இன்னொருத்தி புருஷன் மேல தான் இவளுகளுக்கு மயக்கமே வருது என்ற டயலாக்கை வைத்து உருவான வீடியோவை சோசியல் மீடியாக்களில் பரப்பி வருகிறார்கள்.

GalleryGalleryGallery