சினிமாவுக்கு நோ..தொலைக்காட்சி பக்கம் தாவிய நடிகை ரம்பா!! அதுவும் மீனாவுக்கு பதில்..
Meena
Rambha
Star Vijay
By Edward
90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ரம்பா, 2010ல் திருமணம் செய்து கணவர் குழந்தை என்று வெளிநாட்டில் செட்டிலாகி சினிமாவில் இருந்து விலகினார்.
அதன்பின் பல ஆண்டுகள் கழித்து தொழில் ரீதியாக சென்னை பக்கம் வந்துள்ளார் ரம்பா. ஒருசில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த ரம்பா, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றவுள்ளார்.
விஜய் டிவியின் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டர், நடிகை ஸ்ரீதேவி மற்றும் மீனா நடுவராக பங்கேற்றனர். தற்போது அதன் 2வது சீசன் ஆரம்பமாகவுள்ளது.
அதில், மீனாவுக்கு பதில் ரம்பா நடுவராக இணைந்துள்ளார். ரம்பா கலந்து கொள்வதை பார்த்து அவரது ரசிகர்கள் ஆனந்தத்தில் இருந்து வருகிறார்கள்.