72 வயதான ரமேஷ் கண்ணாவுக்கு என்னா ஆச்சு!! வதந்திகளுக்கு அவரே கொடுத்த முற்றுப்புள்ளி...

Actors Tamil Actors
By Jai Nov 28, 2026 05:35 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் பயணித்து வரும் நடிகர் ரமேஷ் கண்ணா, சமீபத்தில் ஒருவர் துணையுடன் நடந்து சென்ற வீடியோ வைரலானதை தொடர்ந்து இதுகுறித்து பேசி வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

ரமேஷ் கண்ணா

இயக்குநர், வசனகர்த்தா, நடிகர் என்று பன்முகத்திறமையுடன் தமிழ் சினிமாவில் பயணித்து வருபவர் தான் நடிகர் ரமேஷ் கண்ணா. முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தும் இயக்கியும் வந்த ரமேஷ் கண்ணாவுக்கு தற்போது 72 வயதாகிறது.

சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லை, அவரால் சரியாக நடக்க முடியவில்லை, மற்றவர் உதவியுடன் தான் நடக்கிறார், அவருக்கு அந்த பிரச்சனை இந்த பிரச்சனை என்று வீடியோ வைரலாகி பரவியது. சமீபத்தில் ஒருவர் கையை பிடித்து ரமேஷ் கண்ணா நடந்ததை பார்த்து இப்படியான வதந்திகள் பரவியதை அடுத்து அதற்காக விளக்கத்தை கொடுத்துள்ளார்.

72 வயதான ரமேஷ் கண்ணாவுக்கு என்னா ஆச்சு!! வதந்திகளுக்கு அவரே கொடுத்த முற்றுப்புள்ளி... | Ramesh Khanna Health Now His Own Explanation

பேட்டியொன்றில் பேசிய ரமேஷ் கண்ணா, மழை காரணமாக ரோட்டில் தண்ணீர், சகதி இருந்ததால் ஒருவர் கையை பிடித்தபடி பாதுகாப்பாக நடந்தேன். அதை யாரோ வேறு கோணத்தில் வீடியோ எடுத்து தவறான தகவல்களை பரப்பிவிட்டார்கள் நான் நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறேன். இப்போதும் காமெடியனாக பல படங்களில் நடித்து வருகிறேன்.

கோபி சுதாகர் நடிக்கும் படம், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் உட்பட பல படங்கள் விரைவில் வர இருக்கிறது. தொடர்ந்து நடிப்பேன், இதற்கிடையில் ஒரு வீடியோவால் இவ்வளவு பிரச்சனை, அதை தவறாக புரிந்து கொண்டு நலம் விசாரித்த நண்பர்களுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார் ரமேஷ் கண்ணா.