51 வயதிலும் திருமணமான நடிகர் மீது ரம்யா கிருஷ்ணனுக்கு க்ரஷ் இருக்கிறதாம்.. யாருப்பா அந்த நடிகர்

Ramya Krishnan
By Karthick Raja Aug 31, 2022 09:30 AM GMT
Report

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் அவ்வப்போது தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு தனது பிரம்மாஸ்திரா படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் நாகார்ஜுனா கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் நாகாஅர்ஜுனாவிடம் உங்களுடைய க்ரஷ் யாரென்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.

நாகார்ஜுனா இதற்க்கு பதிலளிப்பதற்குள்,நடிகை ரம்யா கிருஷ்ணன் இதற்க்கு பதில் அளித்துவிட்டார் . அவர் கூறுகையில் " யாரை பார்த்து என்ன கேட்குறீர்கள். நாகார்ஜுனாவிற்கு க்ரஷ் ஒண்ணா ரெண்டா. அவருடைய க்ரஷ் எல்லாம் யாரென்று எனக்கு தெரியாது. ஆனால், என்னயுடைய க்ரஷ் நாகாஅர்ஜுனா தான் என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார்.