அச்சு அசல் ஐட்டம் டான்ஸராக மாறிய ரம்யா கிருஷ்ணன்!! கண்ணுக்குள் நிற்கும் 6 பாடல்கள்..
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். சிறு வயதில் நடிகையாக ஆரம்பித்த ரம்யா கிருஷ்ணன், ஆரம்பத்திலேயே கிளாமர் ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.
தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன், ஒருசில படங்களில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டமும் போட்டு கிரங்கடித்துள்ளார். அப்படி ரம்யா கிருஷ்ணன் முக்கிய 6 பாடல்களில் ஆட்டம் போட்ட லிஸ்ட்டை பார்ப்போம்.
விஜய்காந்த், சரத்குமார், எம் என் நம்பியார், மன்சூர் அலிகான் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் சரத்குமாரின் காதலியாக பூங்கொடி ரோலில் நடித்திருந்தார். அப்படத்தில் ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலில் முதல் முறையாக ஐட்டம் ஆட்டம் போட்டு இன்றுவரை பேசப்பட்டு வருகிறார்.
சிம்பு நடிப்பில் வெளியான குத்து படத்தில் போட்டு தாக்கு என்ற பாடலில் கிளாமராகவும் எனர்ஜி குறையாமல் ஆட்டம் போட்டு ஈர்த்தார்.
சூர்யா - ஜோதிகா நடித்த காக்க காக்க படத்தில் தூது வருமா என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார்.
விஜயகாந்த் நடிப்பில் வெளியான நரசிம்மா படத்தில் லாலா நந்தலாலா பாடலுக்கு டான்ஸ் ஆடி அனைவரும் கவர்ந்தார்.
ஜெயராம், சரிதா நடிப்பில் வெளியான ஜூலி கணபதி படத்தில் தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு பாடலுக்கு இளசுகளை ஈர்க்கும் வகையில் ஆட்டம் போட்டிருந்தார்.
அர்ஜுன் மற்றும் மீனா, ஜோதிகா நடிப்பில் வெளியான ரிதம் படத்தில் ஐய்யோ பத்திக்கிச்சி பாடலுக்கு அப்படியொரு கிளாமர் ஆட்டம் போட்டிருப்பார்.