ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும் புகைப்படம்! நடிகை ரம்யா பாண்டியனா இது?

biggboss cookwithcomali ramyapandian tamilactress
By Edward Aug 26, 2021 08:35 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இதையடுத்து ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் பெரியளவில் பேசப்படாமல் இருந்தார்.

இதையடுத்து மொட்டை மாடி போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார். பின் பிரபல தொலைக்காட்சியில் குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தினை பிடித்தார். அந்நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் கேபிஒய் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4 ஆம் இடத்தினை பிடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு சூர்யாவின் ராமே ஆண்டாலும் ராவனன் ஆண்டாலும் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கு இடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போட்டோஷுட் என இருந்து வருகிறார். தற்போது பல நாட்கள் கழித்து ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.