இன்னும் திருமண வாழ்க்கையை வாழவில்லை? உண்மையை உடைத்த பிரபல நடிகை ஆலியா பட் கணவர்..
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஆலியா பட். குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஆலியா பட் வெளிப்படையாக நடிகர் ரன்பீர் கபூருடன் பல ஆண்டுகளாக காதலில் இருந்து வருகிறார்.
இருவரும் ஜோடியாக செல்வதும் ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிடுவதுமாக இருந்து வருகிறார். எப்போது இருவருக்கும் திருமணம் என்று அனைவரும் கேள்வி கேட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற கேத்ரீன் கைஃப் திருமணத்திற்கு பின் தான் என்று கூறப்பட்டது.

ஆலியா - ரன்பீர் திருமணம்:-
அதேபோல் இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்நிகழ்வு பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தம்பதியினர் தங்கள் படங்களில் வேலைக்காக அடுத்த நாளே கிளம்பிவிட்டனர். திருமணமாகிய ஒரு நாளில் கொடுத்த கால்ஷீட்டிற்காக இருவரும் படங்களில் கவனம் செலுத்தினர்.
திருமண வாழ்க்கை ஆரம்பம் எப்போது:-
இந்நிலையில் திருமண வாழ்க்கை பற்றி நடிகர் ரன்பிர் கபூர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். எங்கள் திருமணத்தில் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை. நாங்கள் இருவரும் 5 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்திருக்கிறோம்.
திருமணத்தால் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. ஆனால், சில கமிட்மெண்ட்ஸ் வைத்திருந்தோம். அதனால் திருமணமான அடுத்த நாளே இருவரும் வேலைகளுக்கு சென்றுவிட்டோம். ஆலியா ஷூட்டுக்கு சென்றுவிடார் அதேபோல் போல் நானும் மொஹாலிக்கு ஷூட்டுக்காக சென்றுவிட்டேன்.
பின் லண்டனில் இருந்து ஆலியா வந்தபின் நானும் ஹாம்ஷீரா படத்தின் வெளியிட்டு வேலைகளில் இருந்துவிட்டேன். தற்போது நாங்கள் இருவரும் ஒரு வாரம் பிரேக் எடுக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார் ரன்பீர் கபூர்.