வீட்டைவிட்டு நடுரோட்டுக்கு துரத்திவிட்ட குடும்பம்!! அறந்தாங்கி நிஷா பட்ட கஷ்டங்கள்...
அறந்தாங்கி நிஷா
விஜய் டிவியில் பிரபலமானவர்களில் ஒருவர்தான் அறந்தாங்கி நிஷா. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கேபிஒய் பழகி அறந்தாங்கி நிஷாவின் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் பற்றி பகிர்ந்துள்ளார்.

அதில், அறந்தாங்கி நிஷாவின் கணவர் வெளிநாட்டில் இருந்தபோது அவருடைய குடும்பத்தினருடன் பிரச்சனை ஏற்பட்டது. அபோது குடும்பத்தினர் அறந்தாங்கி நிஷாவை நடுராத்திரியில் வீட்டைவிட்டு துரத்திவிட்டனர். கையில் குழந்தையுடன் அவர் நடுத்தெருவில் வந்து நின்றார்.
இப்போது இருப்பதுபோல் போன் வசதி இல்லை. அந்நேரத்திலும் அவருடைய அப்பா சொந்த ஊரிலிருந்து கிளம்பி வந்து அறந்தாங்கி நிஷாவை கூட்டிக்கொண்டு போனார். ஆனால் போகும்போது இனி நான் உன் வீட்டுக்கு என் பொண்ணை அனுப்பி வைக்கவே மாட்டேன் என்று சண்டை போட்டுட்டு போனார்.

இப்படி வெளியே தெரியாத பல விஷயங்கள் அறந்தாங்கி நிஷா வாழ்க்கையில் நடந்திருக்கிறது. எல்லா வீட்டிலும், குடும்பத்திலும் சண்டை, பிரச்சனை இருக்கலாம், ஆனால் பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் வெளியில் தெரிவதில்லை என்று கேபிஒய் பழனி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.