தீடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகை ராஷி கன்னா.. தயாரிப்பாளர்களுக்கு ஷாக்
salary
rashi kanna
By Kathick
அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில்அறிமுகமானவர் ராஷி கன்னா. இதன்பின், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.
தற்போது நடிகை ராஷி கன்னா, நடிப்பில் அரண்மனை 3, துக்ளக் தர்பார், மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இதுதவிர தெலுங்கில் சில படங்களும், ஹிந்தியில் இரண்டு வெப் சீரிஸ் மற்றும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருவதால், ஏற்கனவே 40 லட்சம் வரை சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த நடிகை ராஷி கன்னா தற்போது தனது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.